தேடல் – நாம் மட்டும் தானா இந்த அண்டத்தில் – பாகம் 3

“மாயா மாயா எல்லாம் மாயா… “
‘மாயா’ என்பது நம்மை பொருத்த அளவில் ‘மாயை’. ஆனா இதே பேர்ல ஒரு அற்புதமான நாகரிகம் இருந்தது. கி.பி 2600 முன்னாடி இவங்களோட கலாச்சாரம் தொடங்கியிருக்கலாம்னு ஒரு கணிப்பு உண்டு. ‘இந்த உலகம் உருண்டை’ன்னு நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி பல நூறு வருஷங்களுக்கு முன்னாடியே மாயன் மக்களுக்கு தெரிஞ்சிருந்தது. இவங்களோட கணித, வானியியல் அறிவும் கண்டுபிடிப்புகளும் இன்றைய விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தும் விதமா இருக்கு. மத்திய மெக்சிக்கோ பகுதியில இந்த மக்கள் வாழ்ந்திருந்தாங்க. கி.மு 1000 போல இவர்களோட நாகரிகம் அதிகமா வளர்ந்தது. இது மாதிரி ஒரு நாகரிகம் இருக்குங்கிறதை கண்டுபிடிச்சது ஸ்பானியர்கள். ஸ்பானியர்களோட ஆக்கிரமிப்பு அவங்களோட ராஜ்ஜியத்தை அழிச்சிருந்தாலும், அவங்களை அழிக்க முடியலை.

மாயாவின் மக்கள் அவங்க மூதாதையர்கள் ப்ளியாடெஸ்ங்கிற நட்சத்திரத்திலேர்ந்து வந்ததா நம்பினாங்க. இதே போல பெரு நாட்டின் ‘இன்கா’ மக்களும் அவங்களோட மூதாதையர்கள் ப்ளியாடெஸ்ல இருந்து தான் வந்ததா நம்பினாங்க. அதே மாதிரி தான் சுமேரியகளும் நம்பினாங்க (இது தற்செயலா நடந்திருக்கவே நடந்திருக்காது). மாயா இனத்தவர் மனிதனை படைச்சது வேற்று கிரக வாசிகள் தான்னு சொல்லற அளவுக்கு நிறைய குறிப்புகள் எழுதி வச்சிருந்தாங்க. அவங்களோட கணித அறிவு , வானியல் அறிவு எலாம் வேற்று கிரக வாசிகள் தான் சொல்லித்தந்ததா எழுதி வச்சிருக்காங்க. அவங்களை கடவுளாவும் வணங்க ஆரம்பிச்சாங்க.

மாயா இனத்தவர்களோட பிரமிடுகளுக்கும், எகிப்தியர்களோட பிரமிடுகளுக்கும் கொஞ்ச வித்தியாசம் தான் உண்டு. மாயா இனத்தவர்களோட பிரமிடுகள்ல படிகள் இருக்கும், எகிப்திதியர்களோடுதுல இருக்காது. இது மாதிரியான பிரமிடுகள் கட்டிய காலத்தை கணிச்சு பாத்தோம்னா, அந்த கால கட்டத்துல உலோக கருவிகளோ, சரியான போக்குவரத்து வசதிகளோ(சக்கரம் கூட கண்டுபிடிச்சிருக்காத காலமா இருக்கலாம்ன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க). எகிப்தியர்கள் போல பரந்த பாலைவனத்துல இவங்களோட பிரமிடுகள் கட்டபடலை. அடர்ந்த காட்டுகுள்ள தான் இவங்களோட நகரமே இருந்தது. அதுமட்டுமில்லாம அடர்ந்த காடுகளை சரியான அளவுல அழிச்சு அங்கேயே சிறந்த முறைல விவசாயமும் செஞ்சாங்க. இந்த இடத்துல ஆறுகள் இல்லாத காரணத்துனால. மழை நீர் சேகரிப்பு மூலமா விவசாயம் செய்யுற அளவுக்கு அவங்க நாகரிகம் இருந்துச்சு.

இவங்களோட பிரமிடுகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்த கட்டிட கலை வல்லுநர் ” மாயன் மக்களின் பிரமிடுகள் கிட்டதட்ட 20 மாடி உயரம் கொண்டவை. ஒரு கட்டிட கலை வல்லுநரா நான் பண்டைய கட்டிடங்களின் கட்டமைப்பு பற்றி தெரிஞ்சுக்க நான் எகிப்து, சுமேரியா போன்ற நாடுகளில் ஆய்வு செய்கிறேன். ஆனால் மாயன் கட்டிடங்களுக்கு தனி சிறப்பு உண்டு. இந்த நகரத்துல இருக்கிற கட்டிடங்கள் நட்சத்திரங்கள் மற்றும் சூரிய மண்டலத்தோட அமைப்பை ஒத்து இருக்கு. இதற்கான கணித அறிவும், வானியல் அறிவும் எப்படி அந்த காலத்துல இருந்துச்சுக்கிறது ரொம்ப ஆச்சரியமான விஷயம்”.

நாம இன்னைக்கு ஆச்சரியமா பாக்குற பிரமிடுகள், பண்டைய கட்டிட கலைகள், பண்டைய கலாச்சாரங்களின் குறிப்புகள், துல்லியமான வானியல் செய்திகள், வெவ்வேறு நாகரிகங்களான எகிப்து, ஆஸ்டெக், சுமெரியன், மாயன் போண்றவற்றின் இடையே இருக்கும் பல பொதுவான விஷயங்கள். அந்த நாகரிகங்களோட பண்டைய குறிப்பேடுகள், சிற்பங்கள் – இதெல்லாம் வச்சு பார்த்தோம்னா மனித சக்திக்கும், அறிவுக்கும் அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை பார்க்கலாம். ஒரு சில குறிப்புகளும், ஓவியங்களும், சிற்பங்களும் வேற்றுகிரக வாசிகளின் (அல்லது மனிதர்கள் அல்லாத வேறொரு இனத்தின்) தாக்கத்தை கண்டிப்பா நம்மால பார்க்கமுடியும்.

பரிணாம வளர்ச்சி விதியின் படி பார்த்தோம்னா நாளுக்கு நாள் நம்மோட அறிவு கூடிகிடே தான் போகனும். அப்படின்னா 2000 வருஷங்களுக்கு முன்னாடி எந்த வித நவீன தொழிநுட்பமும் இல்லாத காலத்துல கட்டபட்ட பிரமிடுகள் போல, ஏன் இன்னைக்கு நம்மால அவ்வளவு துல்லியமா ஒரு சின்ன பிரமிடு(அல்லது வேற கட்டிடமோ) கூட கட்டமுடியல?

தேடல் தொடரட்டும்…….

3 thoughts on “தேடல் – நாம் மட்டும் தானா இந்த அண்டத்தில் – பாகம் 3

  1. நண்பா வியக்க வைக்கும் தவல்களாக உள்ளது.அருமையான தேடல்.

  2. I dont know how 2 rite n tamil..Really excellent work brother & no words 2 praise ur work..i think u ve wrongly selected HR profesion becos u r a person who ve talents like kavingar vairamuthu.. 4m ur thread i ve seen d eng movies Apocalypto & Indiana Jones in Tamil…thank u bro..

  3. அருமைத் தம்பிகள் ரூபனுக்கும், ஸ்டாலினுக்கும் என் நன்றிகள்

Leave a comment