மரணம் ஈன்ற ஜனனம் – துன்பம்

நிஜத்தில் நீ என்னோடு இல்லை எனினும்
கனவுகளில் உன்னோடு கைகோர்கிறேன்.

கவிதைக் காதலன்


ஜன்னல் வழி வீசிய குளிர்காற்றோடு
நம் காதலின் ஜனனம் மற்றொரு முறை நிகழ்கிறது.

வீசிய குளிர்காற்று என் எலும்புகளை ஊடுருவும் போது
உன் நினைவுகள் என் நெஞ்சில் ஊற்றெடுக்கிறது.
ஊசி மழைத்துளி என் உடலை நனைக்கிற போது
ஊசி முனையாகி நீ என் மனதை துளைக்கிறாய்.

கோடை வெயில் என்னை கொளுத்தும் போது
ஊழித் தீயாக நீ என் நிஜங்களை சுட்டெரிக்கிறாய்.
சூரிய ஒளியில் என் கண்கள் கூசாவிட்டாலும்
உன் விழியொளியால் என் கண்ணிமைகள் மூடுகின்றன.

ஆற்று நீரில் என் கால்கள் சறுக்காவிட்டாலும்
உன் விழிநீரால் என் நினைவுகள் நழுவுகின்றன.
கடலலைகளின் ஆர்பரிக்கும் சத்தம் என் காதில் விழுந்தாலும்
உன் விசும்பல் மட்டும் கேட்டு என் உயிரை கதறுகின்றது.

உன் மூச்சு உன் நாசிகளில் உலவுவதை நிறுத்தியதால்
என் மூச்சு என்னை இதயத்தை எரிக்க ஆரம்பித்தது.
உன் உயிர் உன்னை பிரிந்த போது
நான் உயிரற்றவனாக உணர்ந்தேன்.

உன் உடல் தீயில் கருகிய போது
நம் எதிர்காலம் அதில் சாம்பலாகியது.
நீ இவ்வுலகை விட்டு விலகியபோது
நான் என்னை விட்டு விலக ஆரம்பித்தேன்.

உன் ஜீவ ஒளியோடு உலவிய என்னை
காரிருள் நரகத்தில் தள்ளிவிட்டு
இறையொளியோடு நீ மட்டும் கலந்து விட்டாய்.
நீ இன்று என்னோடு இல்லை எனினும்
என் நெஞ்சில் பதிந்துவிட்ட உன் நினைவுகளில்
மட்டும் தான் நான் உன்னை காண்கிறேன்.

என்னில் மிச்சமிருப்பது இவ்வுடல் தான்
காற்றில் கலந்திருக்கும் உன்…

View original post 36 more words

மீள் நினைவுகள்

Boy-Sitting-Alone.pngகடந்த போன காதலும்
கருகிய கனவுகளும்
நெஞ்சில் புதைத்த
நீங்கா நினைவுகளும்
மறைத்த கண்ணீரும்
மறந்து போன வாக்கும்
உன்னைப் பற்றி கேட்கையில்
உயிரோலமிட்லெழுந்து
நீ இல்லாத என் வாழ்வின்
நிதர்சனத்தை சொல்கின்றன
எவரேனும் உன்னைப் பற்றி
கேட்கும் போது
.
.
.
மீறியெழும் எண்ணங்களை
மறைத்துக்  கொண்டு.

ஈரம் பிடித்திருக்கிறது… மழையிலும்… வியர்வையிலும்….4

கண்ணுக்கு தெரியாமல்
உடையை உடலோடு
இணைக்கும் மழைத்துளி போல
உன்னையும் என்னையும்
இணைக்கிறது
நம் காதல்..
.
.
.
.
ஈரம் பிடித்திருக்கிறது… மழையிலும்… வியர்வையிலும்…

ஈரம் பிடித்திருக்கிறது… மழையிலும்… வியர்வையிலும்….3

இடி இடிக்கும் போது
என் நெஞ்சோடு சேர்ந்து
தஞ்சமடைகிறாய்…
ஆனால்.. உன்
மெல்லிய கதகதப்பிலும்
வியர்வை வாசனையிலும்
உன்னிடம் தஞ்சமடைவது
நான்தான் என்பது
உனக்கு தெரியுமா?
.
.
.
.
ஈரம் பிடித்திருக்கிறது… மழையிலும்… வியர்வையிலும்…

ஈரம் பிடித்திருக்கிறது… மழையிலும்… வியர்வையிலும்…2

உன் வியர்வை  துடைக்க
நான் முயல்கையில்
வெட்கப்படும் உன் மேல்,
அங்குல இடம் விடாமல்
படரும் மழை சாரலுக்கு
கிடைத்த வரம்
எனகேப்போது கிடைக்கும் சொல்லடி
என் காதலி..
.
.
.
.
ஈரம் பிடித்திருக்கிறது… மழையிலும்… வியர்வையிலும்

ஈரம் பிடித்திருக்கிறது… மழையிலும்… வியர்வையிலும்….1

28652_433439589815_6260447_n

இந்த மழை இரவில்
உன்   கரம் பற்றிய போது
உன் மேலுதட்டின் வியர்வையும்,
வெளியில் பெய்த மழையும் ,
பிடித்திருக்கிறது.
.
.
.
.
ஈரம் பிடித்திருக்கிறது.. மழையிலும் .. வியர்வையிலும்..

நானெங்கே?

காதல்..காதல்.. காதல்
என்று அலைந்த நானெங்கே?
தெவதைகளின் நினைவுகளில்
வாழ்ந்த நானெங்கே?
மழையிலும் வியர்வையிலும்
மயங்கிய நானெங்கே?
பார்வையில் பட்டதையெல்லாம்
கவிதையாக்கிய நானெங்கே?
கடமையிலும் கனினியிலும்
கவிதையை தொலைத்த‌
நான் மட்டும் இங்கே…
என்னுள் இருந்த நானெங்கே?